அட்சய திருதியை தினத்தையொட்டி தமிழகத்தில் 2 நாட்களில் 11,000 கிலோ தங்கம் விற்பனை
தமிழகத்தில் அட்சய திருதியை தினத்தையொட்டி கடந்த 2 நாட்களில் சுமார் 11 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1000 கிலோ அதிகம் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால், நகைக் கடைகளில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் நேற்றும் அலைமோதியது.
சென்னையில் தியாகராயநகர், புரசைவாக்கம், அடையார், மயிலாப்பூர், குரோம்பேட்டை, தாம்பரம், பிராட்வே, வண்ணாரப் பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் முக்கிய நகைக் கடை கள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததை காண முடிந்தது.
இதேபோல், வாடிக்கையாளர் களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளையும் அறிவித்து விளம்பரம் செய்திருந்தனர். ஏராள மான பெண்கள் குடும்பத்துடன் வந்து நகைகளை வாங்கி சென்ற னர். தமிழகத்தில் மொத்தமுள்ள 35 ஆயிரம் நகை கடைகளில் சுமார் 11 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக நகை கடை உரிமையாளர்கள் தெரிவித் துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியா பாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் கூறுகையில், ‘‘வழக்கமான பண்டிகை நாட்களை காட்டி லும், அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் நகை மற்றும் பொருட் களை வாங்க விரும்புவார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புதிய, புதிய வடிவமைப்புகளில் நகை களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டில் தங்க ஆபரணங்களில் 500-க்கும் மேற்பட்ட புதிய வடிவமைப்புகளில் நகைகள் விற்பனைக்கு வந்துள் ளன. ஒவ்வொரு ஆண்டும் நகை விற்பனை 10 சதவீதம் அதிகரித்து வருகிறது’’ என்றார்.
சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் சுமார் 10 ஆயிரம் கிலோ நகைகள் விற்பனை ஆனது. இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரம் கிலோ விற்பனை ஆகியுள்ளது. பெரும்பாலான மக்கள் வங்கி அட்டைகள், காசோலை மூலம் பணம் செலுத்தினர்’’ என்றார்.
இது தொடர்பாக வாடிக்கை யாளர்கள் அ.ராணி, இ.வனிதா, சு.அகல்யா ஆகியோர் கூறுகை யில், ‘‘அட்சய திருதியை நாளில் சலுகை விலையில் நகைகள் வாங்க முடியும். அதிகளவில் டிசைன்களையும் பார்க்க முடியும். அதனால்தான் இப்போது நகை வாங்க வந்துள்ளோம். மேலும், இந்த தினத்தில் நகை வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது’’ என்றனர்.