Breaking News
ஆட்சியை நிலைகுலைய செய்ய பாஜக திட்டமா? – ஸ்டாலினின் குற்றச்சாட்டை சிறு குழந்தைகூட நம்பாது: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

தமிழகத்தில் ஆட்சியை நிலைகுலையச் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டை குழந்தைகூட நம்பாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சில திருத்தமான கருத்துகளை தெரிவித்து வருகிறார் என நினைத்தேன். ஆனாஸ், தினம் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற் காக கருத்துகளை திரித்து சொல்ல ஆரம்பித்திருக் கிறார்.

தமிழகத்தில் நிலையற்ற ஆட்சியை உருவாக்கவும், அதிமுகவை உடைக்கவும், இணைக்கவும் பாஜக முயன்று வருவதாக அபாண்ட மான குற்றச்சாட்டை கூறி யிருக்கிறார். ஸ்டாலினின் இந்தக் குற்றச்சாட்டை ஒரு குழந்தைகூட நம்பாது. எந்நேரமும் தேர்தல் வரலாம். ஸ்டாலின் முதல்வர் ஆவார் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் போன்றவர்கள் பேசி வருகின்றனர். ஆனால், அதிமுக ஆட்சியை நிலைகுலையச் செய்ய பாஜக திட்டமிடுகிறது என அதிமுகவுக்கு ஆதர வாக ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார்.

மத்தியில் லோக்பால், தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவர்கள் என சர்க்காரியா ஆணையத்தில் பட்டம் சூட்டப்பட்ட திமுகவினர் ஊழலில் சம்பாதித்த பணத் தைத்தான் முதலில் பறிமுதல் செய்ய வேண்டும்.

இன்று சாராய ஆலை, தனியார் கல்லூரி நடத்து பவர்களாகவும், அரசியல் சார்ந்த செல்வந்தர்களாகவும் திமுகவினரே அதிக அளவில் உள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யா கண்ணு, ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். மத்திய அமைச்சர்கள் பலமுறை பேசியும் பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர் களின் பின்னணியில் திமுக இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் எதற் கெடுத்தாலும் பாஜகவை குறைகூறி ஸ்டாலின் பேசி வருகிறார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.