வெயிலுக்கு உகந்த உணவு: பரங்கிக்காய் தோல் துவையல்
என்னென்ன தேவை?
பரங்கிக்காய் தோல் மற்றும் உள்ளிருக்கும் குடல் பகுதி
( விதை நீக்கியது) – ஒரு கப்
மிளகாய் வற்றல் – 3
பெருங்காயம் – சிறிய கட்டி
கடலைப் பருப்பு, உளுந்து – தலா 2 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டு, அது சூடானதும் மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, உளுந்து, பெருங்காயம் ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து, தனியே வையுங்கள். அதே வாணலியில் பரங்கிக்காய் தோல் மற்றும் குடல் பகுதியைச் சூடுபட வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அதனுடன் புளி, உப்பு சேர்த்து அரையுங்கள். வறுத்த பொருட்களைக் கொரகொரப்பாக அரைத்து, இந்த விழுதுடன் கலந்தால் பரங்கிக்காய் தோல் துவையல் தயார்.