பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரஜாபதி குடும்பத்தினரைச் சந்திக்க யோகி ஆதித்யநாத் மறுப்பு
சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்த, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காயத்ரி பிரஜாபதியின் குடும்பத்தினரைச் சந்திக்க உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்து விட்டதாக பிரஜாபதி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
“நாங்கள் முதல்வரை சந்திக்க விரும்பினோம், ஆனால் அவர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார்” என்று குற்றம்சாட்டப்பட்ட பிரஜாபதியின் மனைவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“என் கணவருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன், இன்னொரு முறை முதல்வரைச் சந்தித்து பேச முயற்சி மேற்கொள்வேன்” என்றார் பிரஜாபதியின் மனைவி.
பிரஜாபதியின் மகள் அழுதபடியே, “என் தந்தை அப்பாவி. எங்களுக்கு நீதி வேண்டும். முதல்வர் எங்கள் வேண்டுகோளை ஏற்று நீதியை உறுதி செய்வார் என்று நம்புகிறோம்” என்றார்.