காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்களாம்: பாக். ஆலோசகரின் திமிர் பேச்சு
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கான அனைத்து வாய்ப்புகளை இந்தியா நழுவவிட்டுவிட்டது என பாக். ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றம்சாட்டுகிறார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காடி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், நேற்றுமுன்தினம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், கொல்லப்பட்ட இரண்டு இந்திய வீரர்களின் தலையை துண்டித்து, வெறிச்செயலில் ஈடுபட்டது. பாக்.மீது இந்தியா கடும் கோபத்தில் உள்ளது.
இந்ந சூழ்நிலையில் பாக். வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியது, காஷ்மீர் விவகாரத்திற்கு எல்லை தாண்டிய பயங்கரவாத்தை தூண்டுவது பாக். என இந்தியா கூறுவதை உலகம் ஏற்றுக்கொள்ளாது.
காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதே இந்திய அரசு தான். ஆயுதமின்றி போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொன்று குவித்ததே இந்திய ராணுவம் தான். எனவே,இந்திய ஜனநாயகத்தின் மீது காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். காஷ்மீர் விவகாரத்தில் அமைதி நிலவ பாகிஸ்தானுடனான அர்த்தமுள்ள அமைதி பேச்சுவார்த்தைக்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா நழுவவிட்டுவிட்டது என்றார்.