குப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்
இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஹீரோக்களாகிவிட்டனர். பெரியண்ணா, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களுக்கு இசை அமைத்த பரணி, ‘ஒண்டிக்கட்ட’ படம் மூலம் இயக்குனராகிறார். இதுபற்றி பரணி கூறியது: கிராமத்து கதைகளே மறந்துவிட்டதோ என்ற நிலையில் தற்போது கோலிவுட்டில் வெவ்வேறு கதைக்களங்களுடன் படங்கள் வருகிறது.
கிராமத்து வாழ்க்கையை, சென்டிமென்ட் கலந்து சொல்ல வருகிறது ஒண்டிக்கட்ட. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் ஹீரோ, உச்சத்திலே சிவா, தண்ணில கண்டம் படங்களில் நடித்த நேகா ஹீரோயின். தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேகலா தர்மராஜ், ஷோபா சுரேந்திரன், சுமித்ரா பரணி தயாரிக்கின்றனர்.
ஆலிவர் டெனி ஒளிப்பதிவு. இசை பொறுப்பை நானே (பரணி) ஏற்கிறேன். துண்டு பீடி இல்லேன்னா தூக்கம் வராது, சரக்கு அடிக்கவில்லையின்னா சத்தம் வராது பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. பாபநாசம் அருகே குப்பை கொட்டும் இடத்தில் நடந்த படப்பிடிப்பின்போது பூச்சி, கொசு, எறும்பு கடியை தாங்கிக்கொண்டு ஹீரோ உள்ளிட்டோர் நடித்தனர்’ என்றார்.