விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அதிகரிப்பு
இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.29 கோடி உயர்த்தப்பட்டு ரூ.262 கோடி வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ.23½ கோடியை பெறுவார்கள். இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.1½ கோடி அதிகமாகும். ஒற்றையரில் முதல் சுற்றுடன் வெளியேறுபவர் கூட ரூ.29 லட்சம் பெறுவார்கள்.
இதற்கிடையே, செரீனா வில்லியம்சை இனவெறியுடன் சீண்டியதுடன், இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டாவையும் வசைபாடிய முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் நாஸ்டாசை (ருமேனியா) விம்பிள்டன் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைப்பதில்லை என்றும், ஒரு வேளை டிக்கெட்டுடன் வந்தாலும் அவரை மைதானத்திற்குள் அனுமதிப்பது இல்லை என்றும் போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.