ஒசாமாவிடம் பணம் வாங்கினார் நவாஸ் : வழக்கு தொடர்கிறார் இம்ரான் கான்
காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜிகாதிகளை வளர்ப்பதற்காக 1980 ம் ஆண்டுகளில், அல்குவைதா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனிடம் இருந்து பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் பணம் பெற்றுள்ளதாக பாக்., எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் உளவாளியாக இருந்தவர் கலீத் கவாஜா. இவரது மனைவியும் எழுத்தாளருமான ஷமாமா கலீத், ‘ லீத் கவாஜா : ஷகீத் இ அமான்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த புத்தகத்தில், ஜிகாத்களை வளர்ப்பதற்காக ஒசாமாவிடம் இருந்து நவாஸ் ரூ.1.5 பில்லியன்களை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை எழுதியதற்காக 2010 ம் ஆண்டு பாகிஸ்தான் தாலிபன்களால் கலீத் கொல்லப்பட்டார்.
ஜிகாதிகளை வளர்ப்பதுடன், 1989 ல் அப்போதைய பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, அதனை ஆதரிப்பதற்காகவும் ட்ரில்லியன் டாலர் அளவிற்கு நவாஸ், ஒசாமாவிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இம்ரான், பாக்., சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடர உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.