பருவமழை சராசரிக்கும் கூடுதலாக பெய்யும் : இந்திய வானிலை மையம்
எல் நினோ காரணமாக இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் சராசரி பருவமழையின் அளவு 89 செ.மீ., என உள்ளது. இந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக, அதாவது 96 சதவீதம் அளவிற்கு பருவமழை பெய்யும். இதனால் விவசாயம் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
எல் நினேவும் இந்திய பருவமழைக்கு சாதகமாக சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பருவமழை கூடுதலாக பெய்யும் என்பதால் விவசாய உற்பத்தி 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு மழை அளவு போதிய அளவு இல்லாததே அரிசி உள்ளிட்ட பயிர்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு காரணம். இந்த ஆண்டு நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதற்கும் போதிய அளவு மழை பெய்யும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.