அகில இந்திய ஹாக்கி போட்டி: டெல்லியை வென்றது தமிழக அணி
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9-வது அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இத்தொடரின் 6-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு நடை பெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா கிழக்கு கடற்கரை ரயில்வே அணி யும், டெல்லி ஓஎன்ஜிசி அணியும் மோதின. ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால், ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற ஆட்டங்களில் தமிழ்நாடு லெவன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி மத்திய தலைமை செயலக அணியையும், கபுர்தாலா ஆர்சிஎப் அணி 4-1 என்ற கோல் கணக்கில் போபால் சாய் அணியையும் வீழ்த்தின.
இன்றைய ஆட்டங்கள்:
இன்று காலை 6.30 மணிக்கு பெங்களூரு ஆர்மி லெவன், ஹாக்கி புதுச்சேரி அணிகள் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு டெல்லி ஓஎன்ஜிசி, சென்னை ஐஓபி அணிகள், 6.30 மணிக்கு ஜலந்தர் இஎம்இ கார்பஸ், டெல்லி மத்திய தலைமை செயலக அணிகள், இரவு 8 மணி ஆட்டத்தில் மும்பை இந்திய கடற்படை, போபால் சாய் அணிகள் களம் காணு கின்றன.
கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஓடிசா கிழக்கு கடற்கரை ரயில்வே அணியும், புதுடெல்லி ஓஎன்ஜிசி அணியும் மோதின.