கால் இறுதிக்கு யூகி பாம்ப்ரி முன்னேற்றம்
ஏடிபி கர்ஷி சாலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி தொடரில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி கால் இறுதிக்கு முன்னேறினார்.
நைஜீரியாவின் கர்ஷி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் யூகி பாம்ப்ரி 7-5, 7-5 என்ற நேர் செட்டில் போஸ்னியாவை சேர்ந்த ஹெர்ஸ்கோவினாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 58 நிமிடங்கள் நடைபெற்றது.
கால் இறுதியில் யூகி பாம்ப்ரி, போட்டி தரவரிசையில் முதல் நிலை வீரரான உக்ரைனின் செர்ஜி ஸ்டேக்வோஸ்கியை எதிர்த்து விளையாடுகிறார். அதேவேளை யில் மற்றொரு இந்திய வீரரான பாலாஜி 2-வது சுற்றில் 3-6, 4-6 என்ற நேர் செட்டில் பெல்லார சின் ஜெராசிமோவிடம் தோல்வி யடைந்தார். இந்த தொடரில் இந்திய வீரர்களான ராம்குமார் ராமநாதன், விஷ்ணுவர்தன், குணேஷ்வரன் ஆகியோர் முதல் சுற்றோடு வெளியேறினர்.