நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்
ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார்.
ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார்.
இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார்.
கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என அனுமதிக்கப்பட்டது . ஆனால் இதுவரை நாடாளுமன்ற இரு அவைகளின் எந்த உறுப்பினரும் அவ்வாறு செய்யவில்லை.
ஆனால் 2015ஆம் ஆண்டு பாலூட்டுவதால் நாடாளுமன்ற கடமைகள் தடைபடுவதாக தெரிவிக்கப்பட்டதற்கு பிறகு அது பின்னடைவை சந்தித்தது.
“நிறைய பெற்றோர்களும் பெண்களும் நாடாளுமன்றத்தில் தேவை” என முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார் வாட்டர்ஸ்.
“அதிகப்படியான குடும்பம் சார்ந்த பணியிடங்களும், குழந்தைகளை பராமரிக்கும் வசதிகளும் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த தருணம் அங்கீரிக்கப்பட வேண்டும் என தொழிற்கட்சியைச் சேர்ந்த செனட்டர் கேடி கல்லகெர் தெரிவித்துள்ளார்.
“உலக முழுவதும் உள்ள நாடாளுமன்றத்தில் இது நடந்துள்ளது” என ஆஸ்திரேலியாவின் ஸ்கை நியூஸ் ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
“பெண்கள் தொடர்ந்து குழந்தை பெற்று கொள்ள போகிறார்கள், மேலும் அவர்கள் குழந்தைகளை பராமரித்துக் கொண்டே பணியில் ஈடுபட விரும்புகின்றனர். நாம் அதை ஏற்றுக் கொள்ள போகிறோம் என்பதே நிஜம்”.என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் வரை நாடாளுமன்றத்தின் கீழ்சபை உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளை நாடாளுமன்ற அலுவலகங்களுக்கும், பொது இடங்களுக்கும் அழைத்துச் செல்லலாம்
அரசியல்வாதிகள் செனட்டில் பாலூட்டுவதற்கு 2003 ஆம் ஆண்டு முதல் அ.னுமதி வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்றங்களில் இது நுட்பமான விஷயமாக கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது குழந்தையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று பாலூட்டியதற்கு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன
கடந்த வருடம் பிரிட்டனில் நாடாளுமன்றத்தில் பாலூட்டப்படுவது அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.