அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் இறப்புக்கு முன் எழுதிய கடிதம்: கையெழுத்து, தகவல்கள் உண்மையா என போலீஸ் விசாரணை
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணி யம், இறப்பதற்கு முன் எழுதிய 4 பக்க கடிதம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதைக் கைப் பற்றிய காவல் துறையினர், கடிதத்தில் உள்ள கையெழுத்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் – மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கே.ஆர்.சுப்ரமணியம்(58). அரசு கட்டிட ஒப்பந்ததாரர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சமயத்தில் சுப்ரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2 முறை சென்னை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு சுப்ரமணியம் விசாரணைக்கு சென்று வந்தார். 3-வது விசாரணைக்கு செல்ல வேண் டிய சூழலில், கடந்த 8-ம் தேதி மோகனூரில் உள்ள அவரது விவ சாய தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில், அவரது வயிற்றுப் பகுதியில் விஷம் இருந் ததால், தற்கொலையாக இருக்க லாம் என, காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனி டையே நேற்று முன்தினம் சுப்ர மணியம் இறப்பு வழக்கில் விசா ரணை அதிகாரியாக இருந்த மோக னூர் காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ மாற்றப்பட்டு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
4 பக்க கடிதம்
இதையடுத்து, செந்தில் தலைமையிலான காவல் துறை யினர் ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் இறப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுப்ரமணியம் இறப்பதற்கு முன் எழுதியதாகக் கூறப்படும் 4 பக்க கடிதம் நேற்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது. இதில், அவர் பிறந்த தேதி, கல்வி, வேலை பார்த்த இடம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த கடிதம் 6-ம் தேதி எழுதியதாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது.
கடிதத்தில் நாமக்கல் மாவட் டத்தைச் சேர்ந்த மற்றொரு பிரபல ஒப்பந்ததாரர் ஒருவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் சுப்ரமணி யத்துக்கு தொழில்ரீதியாக பல்வேறு நெருக்கடி கொடுத்ததுடன், அடி யாட்களை வைத்து தாக்க முற்பட்ட தாகவும், வருமான வரித் துறை சோதனைக்கு இவர்தான் காரணம் எனவும் குறிப்பட்டப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன், தனது பெயரை இணைத்து களங்கம் ஏற்படுத்தப் படுகிறது எனவும், ஊடகங்களில் வருமான வரித் துறை சோதனை சம்பந்தமாக வெளியான தகவ லால் மனமுடைந்தாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தைக் கைப் பற்றிய காவல் துறையினர், கடிதத் தில் இருப்பது சுப்ரமணியம் கையெ ழுத்துதானா என, அவரது குடும்ப உறுப்பினரிடம் விசாரணை நடத்தி னர். விசாரணையில், கடிதத்தில் இருப்பது தனது தந்தை சுப்ரமணி யம் கையெழுத்துதான் என, அவ ரது மகள் அபிராமி கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர். எனினும், சுப்ரமணியம் எழுதிய பிற ஆவணங்களில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்தும், அதில் அவர் குறிப்பிட்டுள்ள புகார் உண்மையானதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.