சீனாவில் கடும் நிலநடுக்கம் : தரைமட்டமான வீடுகள்
சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில், எட்டு பேர் பலியாகியினர்; 23 பேர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின.ஆசிய நாடான சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது; இந்த நிலநடுக்கம், ரிக்டரில், 5.5 ஆக பதிவானது. இதனால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. பீதியடைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர்.
சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், எட்டு பேர் பலியாகினர்; 23 பேர் காயமடைந்தனர். பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் படையினர், நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர், வேறு இடங்களில் குடிபெயர்ந்துள்ளனர்.நிலநடுக்கத்திற்குப் பின், 82 முறை நில அதிர்வு உணரப்பட்டதாக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலநடுக்கம் ஏற்றப்பட்டுள்ள நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 226 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.