கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே தோல்விக்கு காரணம்: கேப்டன் கவுதம் காம்பீர் கருத்து
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் பொறுப்பில் லாத ஆட்டமே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதற்கு முக்கிய காரணம் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் – கொல் கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராயுடு 63 ரன்களும், சவுரப் திவாரி 52 ரன்களும் சேர்த்தனர்.
வெற்றிபெற 174 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆட வந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணி யில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 33 ரன்களையும், கிராண்ட் ஹோம் 29 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணியில் டிம் சவுத்தி, வினய் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இப்போட்டியில் 9 ரன் களில் கொல்கத்தா அணி தோற்றது. இப்போட்டியில் தோற்றபோதிலும் 16 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட்டையும் கொண்டிருந்ததால் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
மும்பை அணிக்கு எதிரான தோல்வி குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கூறியதாவது:
கொல்கத்தா மைதானத்தில் 174 ரன்கள் என்பது எளிதாக எட்டக் கூடிய இலக்குதான். எங்கள் முன் னணி பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் கடைசிவரை ஆடியிருந்தால் அந்த ஸ்கோரை எட்டியிருக்க முடி யும். ஆனால் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் எல்லா பந்துகளையும் அடித்து ஆடவேண் டும் என்று நினைத்து பேட்டை சுழற்றியதால் அவுட் ஆனார்கள். பேட்ஸ்மேன்களின் பொறுப்பில் லாத ஆட்டமே எங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறும் பொது, “கடைசி லீக் ஆட்டத்தில் வென்றதன் மூலம் உற்சாகமான மனநிலையுடன் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைகிறோம். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.