தமிழக அரசுத் துறைகளில் குரூப் 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
நிறுவனம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானயம் (TNPSC)
வேலை:
சிவில் சர்வீஸ் குரூப் -2
காலியிடங்கள்:
1953. பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளர் (128), தொழிற்சாலை மற்றும் வர்த்தட்கத் துறையில் உதவியாளர் (130), நெடுஞ்சாலைத் துறையில் உதவியாளர் (156), நில அளவைத்துறையில் உதவியாளர் (105), வணிகவரி ஆணையர் (22) உட்பட 1148 பணியிடங்கள் மற்றும் நிலுவையில் உள்ள 895 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். பொருளாதாரம், புள்ளியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அது சார்ந்த துறைகளில் பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
18 முதல் 30 வரை இருக்க வேண்டும். ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
தேர்வு முறை:
300 மதிப்பெண்களுக்குப் பொது எழுத்துத் தேர்வு நடைப்பெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ளவர்கள் இணையதளம் வழியாக பதிவுக் கட்டணமாக ரூ.150ம், தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே ஒன் டைம் முறையில் பதிவு செய்தவர்கள் ரூ.50 பதிவுக் கட்டணமாகச் செலுத்தினால் பேதுமானது.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.5.17.
தேர்வு 6-8-2017 அன்று நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in இணையதளத்தைப் பார்க்கலாம்.