கடைசி டெஸ்ட்டில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது பாகிஸ்தான் அணி
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி யில் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
டொனிமிகாவில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் 247 ரன்களும் எடுத்தன. 129 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 57 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக யாசிர் ஷா 38, யூனுஸ்கான் 35 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப் 3, கபேரியல், தேவந்திர பிஷூ ஆகியோர் தலா இரு விக்கெட்களை கைப்பற்றி னர். இதையடுத்து 304 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் கடைசி நாள் ஆட்டத்தில் 96 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
கடைசி நாள் ஆட்டம் முடிவடைய 7 பந்துகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் யாசிர் ஷா வீசிய 96-வது ஓவரின் கடைசி பந்தில் கபேரியல் 4 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார்.
ராஸ்டன் சேஸ் 101 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக் காமல் இருந்தார். ஹேட்மையர் 25, ஜேசன் ஹோல்டர் 22, ஹோப் 17 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 5, ஹசன் அலி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப் பையை வென்றது. மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது இதுவே முதன்முறை ஆகும்.
இந்த ஆட்டத்தில் மேற் கொண்டு ஒரே ஒரு ஓவரை மட்டும் கடைசி விக்கெட்டை இழக்காமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிறைவு செய்திருக்குமானால் போட்டியை டிரா செய்திருக்க முடியும். மேலும் தொடரையும் இழக்காமல் சமன் செய்திருக்கும்.
ஓய்வு
இந்த டெஸ்ட்டுடன் கேப்டன் மிஸ்பா உல்-ஹக், யூனுஸ்கான் ஆகியோர் ஓய்வு பெற்றனர். மிஸ்பா 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 சதங்கள், 39 அரை சதங்களுடன் 5,222 ரன்கள் குவித்துள்ளார். அதேவேளையில் யூனுஸ்கான் 118 டெஸ்ட்டில், 34 சதங்கள், 33 அரைசதங்களுடன் 10,099 ரன்கள் குவித்துள்ளார்.