காஷ்மீர் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு புது திட்டம்
காஷ்மீர் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் வன்முறை சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில், முதல்வராக இருக்கும் மெகபூபா முப்தி மென்மையான போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. ஆனால் பதவி விலக மெகபூபா மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு புதிய யுக்தியை கையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, காஷ்மீரில் சுழற்சி முறையில் முதல்வரை நியமிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இது குறித்து முதல்வர் மெகபூபாவுடனும் பா.ஜ., பேசி வருவதாக கூறப்படுகிறது. மெகபூபா இதற்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், சுழற்சி முறையில் முதல்வரை நியமித்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.