Breaking News
ஹாக்கி அணி கேப்டனாக மன்பிரித் சிங் நியமனம்

ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 3 நாடுகள் ஹாக்கி தொடர் மற்றும் அதை தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆடவர் அணியின் கேப்டனாக மன்பிரித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமான கேப்டனான ஜேஷ் காயம் அடைந்துள்ளதால் மன்பிரித் சிங் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

3 நாடுகள் ஹாக்கி தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி ஜெர்மனி யின் டியூஸெல்டார்ப் நகரில் நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி, இந்தியா ஆகிய அணிகளுடன் 3-வது நாடாக பெல்ஜியம் கலந்து கொள்கிறது.

இதை தொடர்ந்து லண்டனில் 15-ம் தேதி தொடங்கும் உலக ஹாக்கி லீக் அரை இறுதியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரில் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் கனடா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த இரு தொடர்களிலும் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப் பட்டது. கேப்டனாக மன்பிரித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சிங்லென்சனா சிங் கங்குஜம் இடம் பெற்றுள்ளார். பின்கள வீரர்களாக பிரதீப் மோர், கோதாஜி சிங், சுரேந்தர் குமார், ரூபிந்தர் பால் சிங், ஹர்மான்பிரித் சிங் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் ஹர்மான்பிரித் சிங், ரூபிந்தர் பால் சிங் ஆகியோர் பெனால்டி கார்னர்களை சிறப்பாக கையாளும் வீரர்கள் ஆவார். ஜேஷ் காயம் காரணமாக அவதிப் பட்டு வருவதால் கோல் கீப்பர்களாக ஆகாஷ் சிக்டே, விகாஷ் தாகியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நடுக்கள வீரர்களாக எஸ்.கே. உத்தப்பா, சட்பிர் சிங், ஹர்ஜித் சிங், சிங்லென்சனா சிங், மன்பிரித், சர்தார் சிங் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் உத்தப்பா, சட்பிர் சிங் ஆகியோருக்கு கடந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. முன்கள வீரர்களாக ராமன்தீப் சிங், எஸ்.வி.சுனில், ஆகாஷ்தீப் சிங், தல்வீந்தர் சிங், மன்தீப் சிங் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

3 நாடுகள் தொடருக்கு தயா ராகும் விதமாக இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி முகா முக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமை 28-ம் தேதி நிறைவு செய்யும் இந்திய அணி வீரர்கள் 29-ம் தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கின்றனர்.

இந்திய அணி விவரம்:

கோல்கீப்பர்கள்:

ஆகாஷ் சிட்டே, விகாஷ் தாகியா.

பின்கள வீரர்கள்:

பிரதீப் மோர், கோதாஜி சிங், சுரேந்தர் குமார், ரூபிந்தர் பால் சிங், ஹர்மான்பிரித் சிங்.

நடுக்கள வீரர்கள்:

சிங்லென்சனா சிங் கங்குஜம், எஸ்.கே.உத்தப்பா, சட்பிர் சிங், சர்தார் சிங், மன்பிரித் சிங் (கேப்டன்), ஹர்ஜித் சிங்.

முன்கள வீரர்கள்:

ராமன்தீப் சிங், எஸ்.வி.சுனில், தல்வீந்தர் சிங், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.