ஏவுகணை சோதனை வெற்றி; வட கொரியா அறிவிப்பு
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ஏவுகணை செலுத்துதலை பார்வையிட்டதாக அரசு ஊடகம் தெரிவித்தது. சோதனைக்குள்ளான ஏவுகணை நீர்மூழ்கிகப்பல்களில் பயன்படும் ஏவுகணையாகும். அது திட எரிபொருளால் இயங்குகிறது. அதன் மூலம் உடனடியாக அதை செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஏவுகணை உற்பத்தியை துவக்க வேண்டும் என்று அதிபர் கிம் கூறியுள்ளதாக தெரிகிறது.
ஏவப்பட்ட ஏவுகணை 500 கி.மீட்டர் பயணம் செய்து ஜப்பான் கடலில் விழுந்ததாக செய்திகள் சொல்கின்றன. ஏவுகணை சோதனையை அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இடை தூர ஹவாசோங்-12 ஏவுகணையை சோதித்த ஒரு வாரத்தில் இந்த ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது வட கொரியா.
முன் எப்போதும் இராத வகையில் அதிக தூரம் இந்த ஏவுகணை பயணித்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அமெரிக்காவை தாக்கக்கூடிய தகுதியை வட கொரியா பெறுவதை நெருங்கிவிட்டதாகத் தெரிகிறது.