கறிவேப்பிலை மிளகுக் குழம்பு
என்னென்ன தேவை?
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
புளி – 40 கிராம்
பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – அரை கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும், அரைத்த பொடியை அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.