சங்கமித்ராவை நம்பி பாகுபலியை விட பெரிய திட்டம் தீட்டும் சுந்தர் சி.
பாகுபலி தென்னிந்திய படங்களை இந்திய லெவலுக்கு கொண்டு சென்றது. நாங்கள் சங்கமித்ரா மூலம் இந்திய படங்களை உலக லெவலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என இயக்குனர் சுந்தர் சி. தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாஸனை வைத்து சுந்தர் சி. சங்கமித்ரா என்ற மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக ஸ்ருதி லண்டன் சென்று வாள் பயிற்சி எடுத்துள்ளார். படத்தில் ஸ்ருதி சங்கமித்ரா என்கிற இளவரசியாக நடிக்கிறார்.
சங்கமித்ரா படக்குழு பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின்போது சங்கமித்ரா திரைக்கதை புத்தகம் வெளியிடப்பட்டது.
படம் குறித்து சுந்தர் சி. கூறும்போது, இந்த படத்தை பண்ணனும் என்பது என் 15 ஆண்டு கால கனவு. 50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் தான் ஒரே பிரமாண்ட தமிழ் படம் என்றார்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்துவிட்டு சங்கமித்ரா குறித்து கனவு காணத் துவங்கினேன். ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டும். முன்பே இந்த படத்தை பண்ணும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் பெரிய பட்ஜெட், தொழில்நுட்ப எக்ஸ்பர்ட்ஸ், நல்ல தயாரிப்பாளர் தேவைப்பட்டது என்று சுந்தர் சி. தெரிவித்தார்.
அதிர்ஷ்டவசமாக தேனாண்டாள் ஸ்டுடியோஸின் முரளி எங்களுக்கு கிடைத்தார். அவரிடம் என் ஐடியாவை கூறினேன், தற்போது படம் எடுக்க உள்ளோம். சங்கமித்ராவை உலக ரசிகர்களுக்கான முதல் தமிழ் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் சுந்தர் சி.
பாகுபலி தென்னிந்திய படங்களை இந்திய லெவலுக்கு கொண்டு சென்றது. நாங்கள் சங்கமித்ரா மூலம் இந்திய படங்களை உலக லெவலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என சுந்தர் சி. கூறியுள்ளார்.