தேன் இட்லி
என்னென்ன தேவை?
இட்லி – 5
தேன் – 100 மி.லி.
நெய் – தேவையான அளவு
மெல்லிய குச்சிகள் – 10
எப்படிச் செய்வது?
இட்லியைச் சதுரத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். தோசைக் கல்லில் நெய் விட்டு இட்லித் துண்டுகளை லேசாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த இட்லித் துண்டுகளைச் சூடாக இருக்கும்போதே தேனில் ஊறவைத்து, குச்சியில் செருகித் தட்டில் வைத்து அதன் மேல் கொஞ்சம் தேன் ஊற்றிப் பரிமாறுங்கள். வறுத்த இட்லித் துண்டுகளை இளம் சூடான சர்க்கரைப் பாகில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.