நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
நாடு முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதியில் தங்களது முந்தைய ஆண்டின் அசையா சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது.
இந்தநிலையில், 2016–ம் ஆண்டுக்கான அசையா சொத்து கணக்கு விவரத்தை 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை என மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 255 பேர் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
ராஜஸ்தானில் 153, மத்திய பிரதேசத்தில் 118, மேற்கு வங்காளத்தில் 109, அருணாசல பிரதேசம், கோவா, மிசோரம், யூனியன் பிரதேசங்களில் 109 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அசையா சொத்து விவரங்களை வழங்கவில்லை.
தமிழ்நாட்டில் 50 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அந்த விவரங்களை தரவில்லை என்று தெரியவந்துள்ளது.