Breaking News
வருமானம் இல்லாத துறைக்கு இத்தனை அதிகாரிகளா?

அரசு போக்குவரத்து கழகத்தின் வருமானத்தை பெருக்க, வழி வகுக்காத அதிகாரிகளுக்கு, அதிக சம்பளம் வழங்கப்படுவதாக, ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது: தமிழகத்தில், சென்னை உட்பட, எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அவற்றில், 22 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக வருமானத்தில், 45 சதவீதம், சம்பளத்திற்கும், 32 சதவீதம், டீசலுக்கும் செலவாகிறது.

பராமரிப்பு, பழுது நீக்கம், தேய்மானம், விபத்து, வட்டி, வரிகள் உள்ளிட்டவற்றிற்கு, 23 சதவீதம் செலவு செய்யப்படுகிறது. போக்குவரத்து கழக நஷ்டத்திற்கு, பல காரணங்கள் உள்ளன. தேவையற்ற செலவுகளை குறைத்து, ஊழல் முறைகேடுகளை சரி செய்ய வேண்டும்.

மாற்றுப் பணி என்ற பெயரில், வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் ஆளும் கட்சியினரை, களையெடுக்க வேண்டும். பஸ் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். அதை செய்யாததால், பல பணிமனைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கோட்டத்திற்கும், ஒரு மேலாண்மை இயக்குனர், ஆறு பொது மேலாளர், 10 மேலாளர், 25 கிளை மேலாளர், உதவி பொறியாளர், வாகன ஆய்வாளர் என, அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், சம்பள செலவில், 60 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை, அதிகாரிகளே பெறுகின்றனர்.

கோட்ட வாரியாக, அதிகாரிகள் நியமிக்கப்படுவதால் தான், இந்த இழப்பு ஏற்படுகிறது. அனைத்து கோட்டங்களையும், ஒரே தலைமையின் கீழ் நிர்வகித்தால், இந்த இழப்பு குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர் எண்ணிக்கை

குறைந்த சம்பளம் வாங்குவோர்
ஓட்டுனர் 9,756நடத்துனர் 10,172தொழில் நுட்ப பணியாளர் 2,885அலுவலகப் பணியாளர் 527இதர பணியாளர் 177
இவர்களுக்கு, 5,000 ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

அதிக சம்பளம் பெறுவோர்
அலுவலக மேற்பார்வையாளர் 101தொழில் நுட்ப மேற்பார்வையாளர் 321போக்குவரத்து மேற்பார்வையாளர் 318மேலாண்மை அலுவலர்கள் 69

இவர்களுக்கு, 30 ஆயிரத்தில் இருந்து, 80 ஆயிரம் ரூபாய்க்கும் மேல், சம்பளம் வழங்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.