ஆட்சி ஓராண்டு நிறைவு; அ.தி.மு.க.,வினர் அமைதி
அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்று, நேற்றுடன்(மே 23) ஓராண்டு நிறைவு பெற்றது. இதை கொண்டாட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக, அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அந்த ஆண்டில், மே, 23ம் தேதி, ஆறாவது முறையாக, ஜெயலலிதா முதல்வர் பெறுப்பேற்றார். செப்., 22ல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், டிச., 5ல் இறந்தார்.
அவரது மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர் செல்வம், சில மாதம் இருந்தார். அவரது விலகலுக்கு பின், பழனி சாமி முதல்வரானார். ஆனாலும், அ.தி.மு.க., பிளவுபட்டு, இரண்டு அணிகளாக செயல்படுகிறது.
இந்நிலையில், நேற்றுடன் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவு பெற்றது. இதை கட்சி சார்பில், யாரும் கொண்டாடவில்லை. ஜெ., இருந்த போது, ஆட்சியின் ஒவ்வொரு ஆண்டு நிறைவின் போதும், வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை எந்த கொண்டாட்டத்திற்கும், பழனிசாமி அரசு ஏற்பாடு செய்யவில்லை. அ.தி.மு.க.,வினரும் கண்டுகொள்ளவில்லை.