எங்கள் நாட்டை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் : பாக்., ராணுவ அதிகாரி தகவல்
”பாகிஸ்தானை பயங்கரவாதிகள் பிற நாட்டுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்,” என்று அந்நாட்டு தலைமை ராணுவ அதிகாரி பாஜ்வா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி டேவிட் ஹேலே மற்றும் பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி ஜாதவ் பாஜ்வா இடையே அமெரிக்கா — பாகிஸ்தான் இடையே பரஸ்பர உறவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த ஆலோசனை நடந்தது.இது குறித்து தலைமை ராணுவ அதிகாரி ஜாதவ் பாஜ்வா கூறும்போது, “இரு நாடுகளும் தங்கள் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானை பயங்கரவாதிகள் பிற நாட்டுக்கு எதிராக பான்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்றார். ஜாவத் பாஜ்வாவின் இந்த கருத்துக்கு டேவி ஹேலே நன்றி தெரிவித்தார்.