அந்நிய நேரடி முதலீடு அதிகம் பெறும் நாடுகள் : இந்தியா தொடர்ந்து முதலிடம்
சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடுகளின் மூலம் தங்கள் நாட்டு கட்டமைப்பை வளமாக்கிக்கொள்ளும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளதாக தி பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டு நுண்ணறிவு அடிப்படையில், அந்நிய நேரடி முதலீடுகளின் மூலம் தங்கள் நாட்டு கட்டமைப்பை வளமாக்கிக்கொள்ளும் நாடுகளின் பட்டியலை, தி பைனான்சியல் டைம்ஸ், எப்.டி.ஐ., அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு அதிகம் பெறும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா மற்றும் சீனாவை முந்தி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2016ம் ஆண்டில், இந்தியா, 809 திட்டங்களுக்காக, 62.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய நேரடி முதலீடாக பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.