டிஎன்பிஎல் டி 20 தொடர்: திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகரானார் முரளிதரன்
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 தொடரில் பங்கேற் றுள்ள திருவள்ளூர் வீரன்ஸ் அணி யின் ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திருவள் ளூர் வீரன்ஸ் அணியின் உரிமை யாளரும் முன்னாள் இந்திய வீரருமான வி.பி.சந்திரசேகர் கூறும்போது, “இந்த சீசனில் எங்கள் அணியின் ஆலோசகராக முரளிதரன் செயல்படுவார். அவரை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என நாங்கள் நினைத்ததும் இல்லை.
திட்டமிட்டதும் இல்லை. வீரர் களை வழிநடத்திச் செல்ல அனுபவம் வாய்ந்த ஒருவர் அணிக்கு தேவையாக இருந்தார். முரளிதரனின் விசாலமான அறிவைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப முடியும்.
தொடர் முழுவதும் அவர் அணியுடன் இணைந்து இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய முரளிதரன், மாநில லீக்கில் ஆலோசகராக செயல்பட சம்மதம் தெரிவித்ததே சிறப்பான விஷயம்.
ஒரு அணியுடன் இணைந்து செயல்படுவதில் சிறந்தவர். அவரிடம் இருந்து திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் வீரர்கள் நிச்சயம் அதிகம் கற்றுக்கொள் வார்கள். முரளிதரனிடம் சிறந்த அனுபவங்கள் உள்ளன, உயர் மட்ட அளவில் விளையாடிய அவர் பல அணிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். கிரிக்கெட் பற்றிய ஆழ்ந்த அறிவை அவர், திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் வீரர்களுக்கு வழங்க முடியும்” என்றார்.
ஆலோசகராக முரளிதரன் நியமிக்கப்பட்டாலும், பயிற்சி யாளராக பரத் அருண் தொடர்ந்து செயல்படுவார் என சந்திர சேகர் தெரிவித்தார். 45 வயதான முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களும், ஒருநாள் போட்டியில் 534 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராகவும் முரளிதரன் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் டி 20 தொடரில் திருவள்ளூவர் வீரன்ஸ் அணி ரன் ரேட் விகித பிரச்சினையால் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. 2-வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளன. இதற்கான பயிற்சிகளை திருவள்ளூவர் வீரன்ஸ் அணி விரை வில் தொடங்குகிறது.