தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்
தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 72 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 42 பயிற்று நர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று ஊக்கத்தொகை வழங்கி னார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பில், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2 கோடி, வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடி, வெண்கலப் பதக்கத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. அதே போல், ஆசிய போட்டிகளில், தங்கத் துக்கு ரூ.50 லட்சம், வெள்ளிக்கு ரூ.30 லட்சம், வெண்கலப் பதக்கத் துக்கு ரூ.20 லட்சம் வழங்கப் படுகிறது. இது தவிர தமிழகத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளை யாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களை கண்டறிந்து அவர்களுக்கு உயரிய பயிற்சிகள் அளிக்கப்படு கின்றன. உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைக் கப்படுவதுடன், சிறந்த விளை யாட்டு வீரர்கள் மேலும் பல சாத னைகள் புரிய உதவித் தொகை வழங்குதல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக கடந்த 2015-ல் கேரளாவில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 66 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக ரூ.2 கோடியே 83 லட்சம், 29 பயிற்றுநர்களுக்கு ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்துக்கான காசோலைகளை தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
அதேபோல், 2016-ல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கபடியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் சேரலாத னுக்கு ரூ.50 லட்சம், அதே ஆண்டு வியட்நாமில் நடந்த பீச் ஆசியன் கபடி போட்டியில் தங்கம் வென்ற அந்தோணியம்மாளுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.
இது தவிர, கடந்தாண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற சிவமகாதேவனுக்கு ரூ.3 லட்சம், ஈரானில் நடந்த கபடி போட்டியில் வெள்ளி வென்ற பவித்ரா, நதியா ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற டி.மாரியப்பனின் பயிற்றுநர் டி.சத்திய நாராயணாவுக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலை களையும் அவர் வழங்கினார்.
கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச மகளிர் சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற ஜி.கே.மோனிஷாவுக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலை, 2010-ம் ஆண்டு வங்கதேச தலை நகர் டாக்காவில் நடந்த 11- வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 12 பேருக்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம், ரூ.4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500-க்கான சாசோலைகளை முதல்வர் நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலை மைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன், விளையாட்டுத்துறை செயலர் ராஜேந்திர குமார், விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் அசோக் டோங்ரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.