கடுகு சாதம்
என்னென்ன தேவை?
வேகவைத்த சாதம் – ஒரு கப்
கடுகு – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடி செய்ய…
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
புளி – சிறிதளவு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா ஒன்று
பெருங்காயத்தூள்
வெல்லம் – தலா கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், கடுகு, புளி, பெருங்காயத்தூள், வெல்லம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, வேகவைத்த சாதம், அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் கடுகு சாதம் ரெடி.