மிஸல் பாவ்
என்னென்ன தேவை?
அவல் – 1/2 கப்,
உருளைக்கிழங்கு – 3,
ஓமப்பொடி (சேவ்) – 50 கிராம்,
தக்காளி ப்யூரி – 1/2 கப்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க தக்காளி – 1,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1/2 கப்,
கறுப்பு கொண்டைக்கடலை – 3 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கியது),
பச்சைப்பயறு – 3 டேபிள்ஸ்பூன்,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கோதுமை பிரெட், உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
தாளிக்க கடுகு – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கொண்டைக் கடலை, பச்சைப்பயறை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கிரேவி செய்ய…
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு விழுது வதக்கி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, தக்காளி ப்யூரி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொத்தமல்லித்தழையை தூவி, கடலை மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பச்சை வாசனை போனதும் இறக்கவும்.
மிஸல் செய்ய…
அவலை அலசி கடுகு தாளித்து, வெந்த கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, உப்பு, மிளகுத்தூள் போட்டு கிளறி வைக்கவும்.
பரிமாறும் முறை…
ஒரு பவுலில் முதலில் தாளித்து வைத்துள்ள அவலைப் போட்டு, அதன் மீது உருளைக்கிழங்கு கிரேவி ஊற்றி வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, சேவ் தூவி அலங்கரித்து பிரெட் உடன் பரிமாறவும்