மூக்கில் ரத்தம் வருவது ஆபத்தா?
:என் மகன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மூக்கில் அடிபட்டு ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. ‘சிலி மூக்கு உடைஞ்சிருக்கு. கவலைப்பட வேண்டியதில்லை’ என்று பலரும் ஆலோசனை சொன்னார்கள்.ஆனாலும், மருத்துவ ஆலோசனை எதுவும் பெற்றுக் கொள்வது நல்லதா என்று யோசனையாக இருக்கிறது? என்ன செய்யலாம்?- கிருஷ்ணவேணி, மோகனூர் ஐயம் தீர்க்கிறார் காது மூக்கு தொண்டை சிகிச்சை சிறப்பு மருத்துவர் நிராஜ் ஜோசி.
‘‘மூக்கில் ரத்தம் வருவதற்கு வயதைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை சாதாரணமான விஷயமாகவே பெரும்பாலும் இருப்பதால் கவலை வேண்டியது இல்லை.மூக்கின் நடுப்பக்கத்தில் உள்ள மென்மையான தண்டு பகுதியில் அதிக ரத்த நாளங்கள் இருப்பதால் மூக்கில் விரல் வைத்து அழுத்தும்போதும், மூக்கை சுத்தம் செய்யும்போதும், அதிக வெயில் படும்போதும், நீண்ட நாள் சளி தொந்தரவு இருக்கும்போதும் நடுத்தண்டின் தோலில் விரிசல் ஏற்பட்டு இதுபோல் ரத்தம் வரலாம்.பயப்படக் கூடிய பிரச்னை இல்லையென்றாலும் வழக்கமான ஆலோசனைக்காக காது மூக்கு தொண்டைமருத்துவரிடம் உங்கள் பையனைஅழைத்துச் செல்வது நல்லது. ஆனால், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூக்கின் வழியே ரத்தம் வந்தால் அது உடனடியாக கவனிக்க வேண்டிய ஒரு பிரச்னை.காரணம், அது பெரும்பாலும் நோயின் அறிகுறியாகவே இருக்கலாம். ரத்தக்கொதிப்பு, மூளையில் நரம்பு மண்டலம் பாதிப்பு, ஹார்மோன்களின் சமநிலையின்மை, ரத்த உறைதல் மாத்திரைகள் உட்கொள்வது போன்ற தீவிரமான காரணங்களால் மூக்கில்ரத்தம் வரும். இவர்கள் உடனடியாகENT மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதுகட்டாயம்.’’