மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ.3,250 கோடி கடன் உதவி பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லியில் நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களின் முன்னிலையிலும் கடல் சார் பாதுகாப்பு உள்ளிட்ட 4 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
மொரீஷியஸ் நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.3,250 கோடி கடன் வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்.பி.எம்.மொரீஷியஸ் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஏற்றுமதி–இறக்குமதி இந்திய வங்கி அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
இதேபோல் மொரீஷியசில் சிவில் சர்வீசஸ் கல்லூரி ஒன்றை இந்தியா அமைத்து தரும் ஒப்பந்தமும், மொரீஷியசில் கடல் சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைக்கும் ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.
இது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்த அறிக்கையில், ‘‘மொரீஷியசின் வளர்ச்சிக்காக ரூ.3,250 கோடி கடன் வழங்குவது அந்நாட்டின் மீது நாம் கொண்டிருக்கும் உறவின் வலிமைக்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்’’ என்று குறிப்பிட்டார்.