டிடிவி தினகரன் ஜாமின் வழக்கு; இன்று தீர்ப்பு
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று(மே 31) வழங்கப்படவுள்ளது.
லஞ்ச வழக்கில் கைது:
அ.தி.மு.க., பிளவுபட்டதைத் தொடர்ந்து, முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்தர், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமின் வழக்கு:
இடைத் தரகர் சுகேஷ் சந்தரின் ஜாமின் மனு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளநிலையில், ஜாமின் கோரி, தினகரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, டில்லியில் உள்ள ஊழல் ஒழிப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தினகரனுக்கு ஜாமின் அளிக்க, டில்லி போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மொபைல் போனை சேதப்படுத்தியது உட்பட, ஆதாரங்களை மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று தீரப்பு:
டில்லி போலீஸ் மற்றும் தினகரன் தரப்பு வாதங்களை கேட்ட சிறப்பு கோர்ட் நீதிபதி பூனம் சவுத்ரி, தினகரன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை இன்று(மே 31) ஒத்திவைத்திருந்தார்.