டிரைவர் அறையில் கேமரா: ரயில் விபத்தை தடுக்க புதுமை
ரயில் விபத்துகளை தவிர்க்கவும், ஓட்டுனர்களை கண்காணிக்கவும், இன்ஜின் அறையில் வீடியோ கேமரா மற்றும் குரல் பதிவு செய்யும் கருவியை பொருத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேமரா:
இது குறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: ரயில் விபத்துகளுக்கு, மனித தவறுகளும் காரணமாக அமைகின்றன. பல நேரங்களில், ரயில் விபத்துகளின் போது, அதற்கான காரணங்கள் தெரியாமல் போய் விடுகின்றன. இதையடுத்து, ரயில் இன்ஜினில், ஓட்டுனர் அமர்ந்து இருக்கும் அறையில், வீடியோ கேமரா மற்றும் குரலை பதிவு செய்யும் கருவியை பொருத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், ரயில்கள் இயக்கப்படுவதை கண்காணிப்பதுடன், ஓட்டுனர்களின் பணிகளையும் கண்காணிக்க முடியும்.
ஜூலை முதல்:
சோதனை அடிப்படையில், ஜூலை மாதம் சில ரயில்களில் இது, பொருத்தப்படும்; பின், மற்ற ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், ரயில் விபத்து ஏற்பட்டால், அதற்கான காரணத்தை அறிந்து, எதிர்காலத்தில், மீண்டும் நடக்காமல் தடுக்க உதவும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.