பறிமுதல் செய்யப்படும் ஜெயலலிதா, சசிகலா சொத்துகளை பராமரிக்க தனி அதிகாரிகள் விரைவில் நியமனம்: வருவாய்த் துறை அதிகாரிகள் தகவல்
சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர் புடைய ஜெயலலிதா, சசிகலா உள் ளிட்டோரின் சொத்துகளைக் கண் டறிந்து கையகப்படுத்தவும், அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும் தனி அதி காரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா ரூ.100 கோடியும், மற்றவர்கள் தலா ரூ.10 கோடியும் அபராதம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை கடந்த பிப்ரவரியில் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், முறைகேடாக வந்த வருவாயில் வாங்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. இதன்படி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
உத்தரவிட்டது யார்?
வழக்கமாக முதல்வர், அமைச்சர் கள் உள்ளிட்டோர் மீது மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையரகம்தான் நடவடிக்கை எடுக்க முடியும். சொத்துக்குவிப்பு வழக்கு முன்னாள் முதல்வர் தொடர்புடையது என்பதால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சொத்துகளை கையகப்படுத்துவது தொடர்பான தகவல் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருப்பவர் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி. எனவே, உள்துறைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலாளரின் கீழ் செயல்படும் பொதுத்துறைக்கு இந்த தகவல் மிகவும் ரகசியம் (STRICTLY CONFIDENTIAL) என்ற வகையில் தெரிவிக்கப்பட்டது. அந்த துறையின் மூலம் சொத்துகளை கையகப்படுத்த வேண்டிய 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் வழக்கு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
தனி அதிகாரி நியமனம்
இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு அனுப்பியுள்ள கடிதத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள், முதலில் தங்கள் மாவட்ட பகுதியில் உள்ள சம்பந்தப் பட்ட சொத்துகளைக் கண்டறிய உள்ளனர். அதன்பின் வழக்கமான நடைமுறைப்படி அந்த சொத்துகள் கையகப்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைக் கண்காணிக்கவும், அவற்றின் மீதான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சிறப்பு தாசில்தார் அந்தஸ்தில் உள்ளவர்கள் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவர். அதற்கான நடவடிக்கைகள் வருவாய்த் துறை மூலம் எடுக்கப்படும்.
ஏலத்தில் விற்பனை
நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள சொத்து களைக் கையகப்படுத்தி, அவற்றை பராமரிக்க வேண்டும். பின்னர், நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி, ஒருவேளை சொத்துகளை ஏலத்தில் விட முடிவெடுத்தால், அதற்கான அடிப் படை நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். பொது ஏலம் என்பது, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடக்கும். ஏலம் நடத்தும் நிறுவனங்களை இதற்காக நியமிக்கவும் வாய்ப்புள்ளது.
ஒருவேளை சொத்துகளை ஏலம் விடாமல் தன்னிடமே வைத்துக்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்தால், அதை பராமரிக்கலாம். ஏலம் விடப்படும் சொத்துகள் மீது கடன் உள்ளிட்ட விஷயங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உரிய தொகை வழங்கப்பட்டு விடும்
இவ்வாறு வருவாய்த் துறை அதிகாரிகள் கூறினர்.
விடுப்பில் சென்ற அதிகாரி