பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும்: தினேஷ் கார்த்திக் விருப்பம்
உள்ளூர் போட்டிகளில் சிறப் பாக விளையாடியதன் மூலம் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார். 2013-ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிலும் அவர் பிடித்திருந்தார். இதுதொடர்பாக அவர் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’ சேனலுக்கு அளித்த பேட்டி:
கடந்த முறை தேர்வு செய்யப் பட்டபோது வித்தியாசமாக உணர்ந்தேன். 4 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக விளையாட விரும்பு கிறேன்.
உள்ளூர் போட்டிகளில் சிறப் பாக விளையாடுவதே இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற திட்டத்து டன்தான். இந்த பார்மை சர்வதேச போட்டி களுக்கும் எடுத்து சென்றால் சிறப்பானதாக அமையும்.
கடந்த ஒரு வருடமாக தமிழக அணியுடனான ஆட்டம் எனக்கு சிறப்பாக அமைந்தது. தமிழக அணியின் ஒட்டுமொத்த முயற்சியால் தான் நான் மீண்டும் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளேன். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட விரும்புகிறேன்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் எப்போதும் அற்புதமாகவே இருக்கும். ஓட்டலில் இருந்து மைதானம் வரை ரசிகர்கள் கூட்டம் வெகுவாக இருக்கும். கடந்த முறை சாம்பியன்ஸ் டிராபி யில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் நானும் பங்கு பெற்றேன். அது சிறப்பான விஷயம். மீண்டும் பாகிஸ் தானுக்கு எதிரான ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
பெற்றோர்களின் உதவி இல்லாமல் இந்த நிலைமைக்கு என்னால் உயர்ந்திருக்க முடியாது. சிறிய வயதில் என்னை மைதானத்துக்கு அழைத்து செல்வது முதல் அதிக உதவிகள் செய்துள்ளனர். எனது தந்தை குவைத்தில் பணிபுரிவார். நான் இந்தியாவில் இருப்பேன். குடும்பத்தில் எவ்வளவோ கஷ்டங்கள் இருந்துள்ளது. அந்த சூழ்நிலையிலும் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன் என்றால் அதன் பெருமை பெற்றோர்களையே சேரும்.
எனக்கு அவர்கள் சிறந்த முறையில் வழிகாட்டியாக இருந் துள்ளனர். படிப்பில் நெருக்கடி கொடுத்தது கிடையாது. இதுபோன்ற சிறிய விஷயங்கள் கூட கிரிக்கெட் வீரருக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.
நன்றி: ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தமிழ்