இந்தியா ரஷ்யா இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலை அமைப்பது உட்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா ரஷ்யா இடையே கையெழுத்தானது
5 ஒப்பந்தங்கள்
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நான்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார் தொடர்ந்து கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலை அமைப்பது உட்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தானது.
நட்புறவு மோடி பெருமிதம்
இந்த ஒப்பந்தத்தின் போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தை இருவரும் ஏற்றக்கொண்டனர். தொடர்ந்து பேசி ய பிரதமர் மோடி இந்தியா-ரஷ்யா இடையே வலிமையான நட்பு 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகள் இடையே சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிமுறைகள்தளர்த்தப்படும். இந்தியா-ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு புதிய திசையி்ல் பயணிக்கிறது. டில்லியில் உள்ள சாலைக்கு மறைந்த ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கடாக்கின் பெயர் வைக்கப்படும் .இந்திரா 2017 என்ற பெயரில் முப்படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.