பேட்டிங்கில் 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்: வங்கதேச கேப்டன் மோர்டசா வருத்தம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. தமீம் இக்பால் 128, முஸ்பிஹூர் ரகிம் 78 ரன்களும் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணியில் பிளங்கெட் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 306 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 133, அலெக்ஸ் ஹேல்ஸ் 95, கேப்டன் மோர்கன் 75 ரன்கள் சேர்த்தனர்.
வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறும்போது, “பிரதான பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அவர் இல்லாத நிலையில் பந்து வீச்சு சுமையை அணியில் உள்ள மற்ற வீரர்கள் சரியாக கையாண்டனர்.
ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 330 ரன்களை சேர்க்கும் என்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்துக்கு தகுந்தபடி அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கடைசி கட்டத்தில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது.
ஒரே ஓவரில் இரு விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது சிறப்பான விஷயம். ஜோ ரூட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. அடுத்த ஆட்டத்துக்குள் அவர் முழு உடல் தகுதியை அடைந்து விடுவார்” என்றார்.
வங்கதேச அணியின் கேப்டன மோர்டசா கூறும்போது, “நடு ஓவர்களில் நாங்கள் விக்கெட்கள் கைப்பற்ற தவறிவிட்டோம். மேலும் பேட்டிங்கில் 330 முதல் 340 ரன்கள் வரை எடுக்கும் நிலையில் இருந் தோம்.
ஆனால் அதை நாங்கள் செய்ய தவறினோம். கடைசி கட்டத்தில் அதிக விக்கெட்களை இழந்தோம். தமீம் ஆட்டமிழந்த அடுத்த பந்தி லேயே முஸ்பிஹூர் ரகிமும் ஆட்ட மிழந்ததே பெரிய பிரச்சினையாக அமைந்தது. 20 முதல் 30 ரன்கள் குறைவாக நாங்கள் சேர்த்ததாகவே கருதுகிறோம்” என்றார்.