கோலி அறக்கட்டளை நிகழ்ச்சியில் விஜய் மல்லையா பங்கேற்பு: இந்திய வீரர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்தில் விராட் கோலியின் அறக்கட்டளை நடத்திய இரவு விருந்து நிகழ்ச்சியில் விஜய் மல்லையா பங்கேற்றது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு வங்கி களில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்திருந்தார். அவர் போட்டியை ரசித்த காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் விஜய் மல்லையா கலந்துகொண்டுள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டிருந்தனர்
விஜய் மல்லையாவை இந்த நிகழ்ச்சியில் பார்த்ததும் இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பேச வந்தால் என்ன செய்வது என்று தர்ம சங்கடத்தில் இருந்தனர். மல்லையாவுடன் பேசுவதை தவிர்ப்பதற்காக அவரிடம் இருந்து விலகி இருந்தனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் இதுபற்றி கூறும் போது, “விராட் கோலியோ, அவரது அறக்கட்டளை உறுப் பினர்களோ மல்லையாவை இந்த விருந்துக்கு அழைக்கவில்லை. ஆனால் இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகளில் சிலர் டேபிள்களை வாங்கி தங்களுக்கு பிடித்த மானவர்களை அழைக்கும் முறை உள்ளது. அதுபோன்று யாராவது ஒருவர் விஜய் மல்லையாவை இந்த விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம்”என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது விஜய் மல்லையாவிடம் பேசு வதை விராட் கோலி உட்பட இந்திய வீரர்கள் தவிர்த்ததாகவும், அவரிடம் இருந்து விலகி இருந்த தாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. சர்ச்சைகள் ஏற்படாமல் தவிர்க்க, இந்திய வீரர்கள் விருந்து நிகழ்ச்சியில் இருந்து விரைவில் திரும்பியதா கவும் கூறப்படுகிறது.
விராட் கோலி இடம்பெற்றுள்ள ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளராக விஜய் மல்லையா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.