பெட்ரோல் விலை தினந்தோறும் நிர்ணயம்; ஜூன் 16 முதல் நாடு முழுவதும் அமல்?
பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை நாடு முழுவதும் வரும் 16ம் தேதி (ஜூன் 16) முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதுச்சேரி, சண்டிகர், உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 5 நகரங்களில் மட்டும், சோதனை முயற்சியாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் இதன் விலையை நிர்ணயித்தன.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை, நாடு முழுவதும் ஜூன் 16 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.