ரயில்வேக்கு டுவிட்டர் மூலம் தினமும் 3 ஆயிரம் புகார்கள்
இந்திய ரயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில், தினமும் 3 ஆயிரம் புகார்கள் பெறப்படுவதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், ரயில்வேக்கும், மக்களுக்கு நட்புப்பாலமாக அமையும்பொருட்டு, 2015 ஜூலை மாதத்தில், இந்திய ரயில்வே சார்பில் டுவிட்டர் பக்கம், அமைச்சர் சுரேஷ்பிரபுவால் துவக்கப்பட்டது. தற்போது இந்த பக்கத்தில் 25 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனர்.
இந்த டுவிட்டர் பக்கத்தில் தினமும் 6,500 டுவிட்கள் பதியப்படுகின்றன, இவைகளில் 3 ஆயிரம் டுவிட்கள் புகார்களாகவே உள்ளன. இந்த புகார்களுக்கு அரைமணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்கும் பொருட்டு, 24 மணிநேர சேவையாக 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களின் புகார்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு அதற்கு தீர்வும் கண்டறியப்பட்டு வருகிறது.
புகார்கள் மற்றும் பிரச்னைகள் உடனடியாக களையப்பட்டு வருவதால், ரயில் பயணிகளுக்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் நல்லதொரு உறவு நீடிக்கிறது. இது டுவிட்டரின் மூலமே சாத்தியமானது, இந்த புகார்கள் மற்றும் பிரச்னைகள் தங்களது சேவைகளை துரிதப்படுத்திக்கொள்ள உதவுவதாக ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.