சீன விமானத்தில் ஓட்டை : 265 பயணிகள் தப்பினர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்கு 265 பயணிகளுடன் சீன விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, இடதுபுற இன்ஜினில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் பயங்கரமாக சத்தம் கேட்டது. எரிவது போன்ற வாசனையும் வீசியது.
பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பயணிகள் அனைவரும் ‘சீட் பெல்ட்’ அணியும்படி உத்தரவிடப்பட்டது.
விமானத்தை மீண்டும் சிட்னி விமான நிலையத்திற்கு திருப்பினார்கள். பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் காயமின்றி தப்பினர்.
விமான இடதுபுற இன்ஜினில் விசிறி சுற்றும் இடத்தில் பெரிய ஓட்டை விழுந்திருந்தது தெரியவந்திருந்தது. அது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. விமானம் ஓடுதளத்தில் சென்று பறந்தபோது, மர்ம பொருள் தாக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.