நாடு கடத்தப்படுவாரா மல்லையா: மான்செஸ்டர் கோர்ட் விசாரணை
வங்கி மோசடியில் நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபர் மல்லையா மீதான வழக்கு அந்நாட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையாவை நாடு கடத்திகொண்டு வரும் வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
ரூ. 9000 கோடி வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடினார் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. லண்டன் மெட்ரோ பொலிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஏப்ரலில் ஜாமினில் விடுதலையானார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையாவை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது. அதற்கான போதுமான ஆவணங்களை மான்செஸ்டர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது மல்லையா நாடு கடத்த கோர்ட் உத்தரவிடுமா என்பது தெரியவரும்.
இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில், இந்தியா-பிரிட்டன் இடையே 1993-ம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தான் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சமீர்பாய் வினுபாய் பட்டேல் என்பரை லண்டனில் இருந்து நாடு கடத்தி கொண்டு வந்தோம். அதன்படி மல்லையாவையும் இந்தியா கொண்டு வருவோம் என்றனர்.