பாகிஸ்தான் அணிக்கு அபராதம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத் தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாகிஸ் தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கார்டிப் நகரில் நேற்று முன்தினம் இரு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. இதில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக் கப்பட்ட நேரத்தில் ஒரு ஓவர்கள் குறைவாக வீசியது.
இதையடுத்து ஐசிசி மேட்ச் ரெப்ரி கிறிஸ் பிராடு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், அணி யில் உள்ள மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய அபராத மானது கள நடுவர்களான புரூஸ் ஆக்ஸன்போர்டு, எராஸ்மஸ் மற்றும் 3-வது நடுவரான கிறிஸ் காஃப்பானே, 4-வது நடுவரான இயன் கோல்ட் ஆகியோரது புகாரின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது.