நவாஸ் ஆதரவு யாருக்கு?: சவுதி மன்னர் கேள்வி
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆதரவு சவுதிக்கா, அல்லது கத்தாருக்கா என அவரிடமே சவுதி மன்னர் சல்மான் கேட்டுள்ளார்.
கத்தார் நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் சில கத்தாருடன் உறவுகளை துண்டித்து விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் சவுதி அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று சவுதி விரும்புகிறது.
கத்தார் நெருக்கடியை முன்னிட்டு சவுதிக்கு சென்ற நவாஸ் ஷெரீப் ஜெட்டாவில் சவுதி அரசர் சல்மானை சந்தித்தார். அப்போது, அரசர் சல்மான், “முஸ்லிம்கள் நலன் கருதியே பயங்கரவாதத்துக்கு எதிராக போராட வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.
அப்போது அவர் நவாஸ் ஷெரீப்பிடம் பாகிஸ்தான் கத்தார் பக்கமா, சவுதி பக்கமா என்பதையும் கேட்டுள்ளார். முஸ்லிம் நாடுகளிடையே பிளவு ஏற்படுத்தும் எந்த முயற்சிக்கும் பாகிஸ்தான் துணைபோகாது என்று ஷெரீப் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கத்தாருடனும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.