பெட்ரோல் பங்க் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
பெட்ரோல் விலையில், தினமும் மாற்றம் செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நடத்தவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
எதிர்ப்பு:
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை, நாளை(ஜூன் 16) முதல், தினமும் மாற்றுவதென, எண்ணெய் வினியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கு, அகில இந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது; 16ம் தேதி முதல், பெட்ரோலியப் பொருட்களை வாங்கவும், விற்கவும் மாட்டோமென, இந்த கூட்டமைப்பு, வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது.
வாபஸ்:
இந்த அமைப்பின் கீழ், நாடு முழுவதும், 86 சதவீத பெட்ரோல் பங்க்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பு நேற்று தெரிவித்தது.