லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்; பலர் காயம்
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலை நகர் லண்டனில் உள்ள, 24 தளங்கள் உடைய அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று நடந்த தீ விபத்தில், 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள னர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
மேற்கு லண்டனின் லாட்டிமர் சாலையில் லான்காஸ்டர் மேற்கு எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளது, 24 மாடிகள் உடைய கிரென்ர பெல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்.இதில், 100க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வந்தன. உள்ளூர் நேரப்படி, நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்டு, புகை மண்டலத்துக்குள் சிக்கியுள்ளோம் என்பதை, துாக்கத்தில் இருந்த மக்கள் உணர்ந்து வெளியேறுவதற்குள், தீ, மள மளவென பரவத் துவங்கியது. கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ, மிக வேகமாக, மேல் தளங்களுக்கும்
பரவியது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பியவர்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், 100க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல், கட்டடத்தில் சிக்கியுள்ளதாக, தப்பி யவர் கள் தெரிவித்துள்ளனர். பெரும் தீயுடன், புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளதால், அந்த கட்டடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர் களுக்கும் கண்ணெரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டடம் அமைந்துள்ள பகுதியில், முஸ்லிம் கள் அதிகம் வசிக்கின்றனர். ரம்ஜான் மாதத்தை யொட்டி, சூரிய உதயத்துக்கு முன்னதாகவே உணவு எடுத்துக் கொள்வதற்காக, அதிகாலையிலேயே எழுந்திருந்தவர்கள், அந்தக் கட்டடம் தீயில் எரி வதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.
மீட்பு பணி:
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் கூறியதாவது: தீ, முழுவ துமாக கட்டுப்படுத் தப்பட்ட பிறகே, உள்ளே சிக்கியுள்ளவர்கள் உயிருடன் உள்ளனரா என்பது குறித்து தெரிய வரும். 100க்கும் மேற்பட் டோர் உள்ளே சிக்கியுள்ளதாக தெரிகிறது.
தீயின் வீரியம் மற் றும் புகை மண்டலம் சூழ்ந் துள்ளதால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக் கலாம் என, சந்தேகப்படுகிறோம். இதுவரை, 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இடிந்து விழும் அபாயம்
தீவிபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் பலர் உள்ளே சிக்கியுள்ள தங்களுடைய குடும்பத்தி னர் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள அங்கும் இங்கும் அலைந்தனர்.தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்துள்ள, அந்தக் கட்ட டம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இது, தீ விபத்தில் தப்பியவர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘நான் தப்பித்து வந்தபோது, மக்கள் தீயில் எரிவதை நேரில் பார்த்தேன்’ என, லண்டன் அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் இருந்து தப்பியவர்கள், தங்கள் அனுபவங்களை சோகத்துடன் தெரிவித்தனர்.