வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம்: இந்தியர்கள் முதலிடம்
வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர்கள் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பணி வாய்ப்புகளை தேடி செல்பவர்கள், அங்கு சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டிலுள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்புவர்.
அவ்வகையில், உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், கடந்த ஆண்டு(2016) மட்டும் இந்தியாவுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 550 கோடி ரூபாய் (62.7 பில்லியன் டாலர்கள்) தொகையை அனுப்பியுள்ளனர். இதன்மூலம் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணத்தை அதிகளவு பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
இரண்டாவது இடத்தை சீனர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டிற்கு, 3 லட்சத்து 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய் (61 பில்லியன் டாலர்கள்) அனுப்பியுள்ளனர்.